வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஹடோவிட, ஓகொட பிரதேசங்களில் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு இன்று பகல் வேலைக்கான சமைத்த உணவுகளை வழங்க அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் M .H .M . அஷ்ரப் ஏற்பாடு செய்துள்ளார்.
நேற்று இரவு முதல் பேய்ந்த கடுமையான மழை காரணமாக கஹடோவிட, ஓகொட பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக கஹடோவிட Oxford சர்வதேச பாடசாலை மூடப்பட்டுள்ளதுடன். இரு பிரதேசங்களிலும் வீடுகள் பல பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் வெள்ளம் அதிகரித்துவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.





