முதல் முறையாக கூகுல் நிறுவனம் தனது ' டேட்டா சென்டர்" படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.



இணையா உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் கூகுள் நிறுவனமானது முதல் தடவையாக தனது பாவனையாளர்களின் தகவல்களைச் சேமித்து வைத்துள்ள  ' டேட்டா சென்டர்' படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.




நாம் கூகுளில் தேடும் விடயங்கள், யூடியூப் காணொளிகள், எமது ஜீ மெயில் கணக்கின் மின்னஞ்சல்கள் என கூகுளின் அனைத்து இணையம் சார்ந்த செயற்பாடுகளும் இங்கேயே இடம்பெறுகின்றன.


கூகுளின் டேட்டா சென்டர்களுக்குள் அந்நிறுவனத்தின் ஊழியர்களே அனுமதிக்கப்படுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுவர குறிப்பிட்ட வெகு சிலரே இதுவரை அதன் டேட்டா சென்டர்களுக்குள் சென்றுள்ளனர்.
இதற்கு கூகுள் தெரிவிக்கும் காரணம் என்னவெனில் "our first priority is the privacy and security of your data, and we go to great lengths to protect it, keeping our sites under close guard"  என்பதாகும்.

ஆயிரக் கணக்கான சேர்வர்கள், வண்ண வண்ண கேபள்கள் எனக் காட்சியளிக்கும் 'டேட்டா சென்டர்கள்' பார்ப்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றது.






கூகுளின் முக்கியமான ' டேட்டா சென்டர்கள்' 8 இடங்களில் அமைந்துள்ளன.
Berkeley County, S.C., Council Bluffs, Iowa , Douglas County, Ga., Mayes County, Okla., Lenoir, N.C., The Dalles, Ore., Hamina, Finland , St. Ghislain, Belgium.


தற்போது சிலி, சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்வான் ஆகிய நாடுகளிலும் டேட்டா சென்டர்களை கூகுள் நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post