Blackberry 10 மொபைல் விரைவில் சந்தைக்கு...


Blackberry மொபைல் போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த Blackberry 10 ஆபரேட்டிங் சிஸ்டம் எதிர் வரும் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று அறிமுகப்படுத்தப்படும் என Research In Motion  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Blackberry நிறுவனத்தின் CEO Thorsten Heins ஒண்டோரியோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்த தகவலை தெரிவித்தார். மேலும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் எளிதில் கையாளும் வண்ணத்தோடு, பல புதுவிதமான அப்ளிகேஷன்ஸ் நிறைந்ததாக இருக்கும் என்றும், இதை மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் தயாரிக்க தங்கள் குழுவினர் இரவு பகலாக ஓய்வின்றி வேலை செய்து தயார் செய்ததாகவும், அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post