டுவிட்டர் போன்ற மைக்ரோபுளக்ஸ் எனப்படும் பிரபலமான சிறு வலைத்தளங்கள் பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாட்டை கொண்டுவரும் நோக்கம் குறித்து சீனாவின் புதிய தலைமை சமிக்ஞை காட்டியிருக்கும் நிலையில், இணையத்தின் மீது சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
சட்டபூர்வமான கட்டுப்பாடுகளுக்கு தம்மை உட்படுத்திக்கொள்ளும் வகையில், புதிய ஏற்பாட்டின் படி, இணைய பயன்பாட்டாளர்கள் அனைவரும் தமது சொந்தப் பெயரிலேயே தம்மை இணையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
சட்டவிரோதமானது எனத் தென்படும் எந்தவொரு தகவலின் வெளியீட்டையும் இண்டர்நெட் சேவைகளை வழங்குவோர் உடனடியாக தடுத்தாக வேண்டும்.
தவறுகள் குறித்த பதிவுகள் மற்றும் அறிக்கைகளை அவர்கள் நிர்வாகத்துக்கு அறிவிக்க வேண்டும்.
ஏற்கனவே கடுமையான தணிக்கை இருக்கின்ற போதிலும், சீன வலைத்தளங்கள் பாவனையாளர்கள் அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பல ஊழல்களை அண்மைய வருடங்களில் வெற்றிகரமாக வெளியே கொண்டுவந்திருந்தார்கள்.
BBC
Tags
தொழில்நுட்பம்
