சிங்களவர்களின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக சிங்கள இனம் விரைவில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ராமஞ்ய நிகாயவின் மாநாயக்க தேரரான நாபான பிரேமசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிங்கள இனத்தவர்கள் பிள்ளைகளை பெறுவதில் அக்கறையின்றி வாழ்வதானது எதிர்காலத்தில் பெளத்த தேரர்களை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் பிக்குகளை உருவாக்க பெளத்த சிங்களவர்களிடம் பிள்ளைகள் இருக்கமாட்டார்கள். சிங்களவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாத இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக பெளத்த சிங்கள இனம் விரைவில் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.இதுகுறித்து பொறுப்புக் கூறவேண்டிய அனைவரும் அக்கறையின்றி இருப்பது கவலை அளிக்கிறது.
உலக அழிவைப் பற்றி பலரும் பேசுகின்றனர்.எனினும் உலக அழிவு நடக்கிறதோ இல்லையோ பெளத்தர்களின் அழிவு நெருங்குகிறது.ஏனெனில் ஏனைய மதத்தவர்கள் தமது பிள்ளைகளை பிக்குகளாக மாற்றமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
தகவல்: விடிவெள்ளி இணையம்
