திஹாரிய சாம்பியன் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
திஹாரிய கிராமத்தின் 9 வீரர்கள் கொண்ட 6 அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு சென்ட்ரல் பிளேஸ் அணியும், புரூம்ஹில் எஸ்டேட் அணியும் மோதிக்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டில் புரூம்ஹில் எஸ்டேட் அணி 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது.
திஹாரிய சாம்பியன் லீக் உதைபந்தாட்ட போட்டியின் சிறந்த வீரர்களுக்கான விருது ஆசிப், அர்ஷான், ஹபீல் மற்றும் பெத்தும் தனதாக்கிகொண்ட அதேவேளை சிறந்த கோல் காப்பாளராக விருது உஸ்மான் அவர்களும், சிறந்த தலைவருக்கான விருது சிராஸ் அவர்களும், போட்டித்தொடரின் சிறந்த வீரருக்கான விருது முஜாஹிட் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இப்போட்டியிற்கு சிறப்பு அதிதிகளாக திஹாரிய யூத் இன் தலைவர் ஜனாப் செயாட் அவர்களும், தொழிலதிபர் ஜனாப் ஸரூக் அவர்களும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான ஜனாப் குஜி ஹனிபா மற்றும் ஜனாப் அஷ்ரப் ஆகியோருடன் ஊர்மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்
போட்டியில் கலந்துகொண்ட அணிகளின் பெயர்கள்:
01. புரூம்ஹில் எஸ்டேட் - DORF
02. சென்ட்ரல் பிளேஸ் - BOOTH
03. ஊர்மனை - CITY
04. நாப்பிரித்த - SUN SHINE
05. திஹாரிய - OLD YOUTH
06. ஹிஜ்ரா மாவத்த












