சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7000 ஓட்டங்களைக் கடந்தார் டில்ஷான்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7000 ஓட்டங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார் இலங்கை வீரர் திலகரத்ன டில்ஷான்.

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இன்று 14ஆவது ஓட்டத்தைப் பெற்றபோதே 7000 ஓட்டங்களைக் கடந்தார் திலகரத்ன டில்ஷான்.

இலங்கை அணி சார்பில் 7000 ஓட்டங்களைக் கடந்த ஏழாவது வீரராக டில்ஷான் திகழ்கிறார். உலகளாவிய ரீதியில் 7000 ஓட்டங்களைக் கடந்த 33ஆவது வீரராகவும் மாறியிருக்கிறார் டில்ஷான்.

இன்றைய போட்டியில் 19 ஓட்டங்களுடன் டில்ஷான் ஆட்டமிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post