பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர் நேற்று காலமானார்

பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர்  காழி ஹூஸைன் அஹ்மத் தனது 74 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (06.01.2013) இஸ்லாமாபாத்தில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மரணம் பொதுவாக இஸ்லாமிய உம்மத்திற்கும் குறிப்பாக சர்வதேச இஸ்லாமிய இயக்கத்திற்கும் ஓர் இழப்பாகும்.இஸ்லாத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரான சக்திகளை துணிந்து எதிர்கொண்ட மாபெரும் ஆளுமைமிக்க ஒரு தலைவராவார். இவர் ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞரும் பாகிஸ்தானில் இஸ்லாமிய மறுமலா்ச்சிக்காக கடுமையாக உழைத்தவருமாவார்.

அன்னாரின் மரணம் குறித்து இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர்  உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்களும், மத்திய மஜ்லிஸ் ஷூரா உறுப்பினர்களும் அங்கத்தவார்களும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் குடும்பத்தினருக்கும் பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி அங்கத்தவார்களுக்கும் தெரிவித்துக் கொள்வதுடன் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸை வழங்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றனா

ஊடகப் பிரிவு -இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி




Post a Comment

Previous Post Next Post