பாகிஸ்தான், இந்திய இறுதிக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்- பரபரப்பு தகவல்


புதுடெல்லியில் நடைபெற்ற இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றிருப்பதாக, முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரர் பால்நிக்சன் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி-20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடியது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி இலகுவான 167 ரன்களை எட்ட முடியாமல் தோல்வி அடைந்ததிருந்தது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பால்நிக்சன், "இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறக் கூடிய நிலையில்தான் இருந்தது. ஆனால் கடைசி சில ஓவர்களில் வேண்டுமென்றே பாகிஸ்தான் விளையாடியதாகவே அனைவரும் எளிதாக யூகிக்க முடியும்." என்று கூறியுள்ளார்.

மேலும் ட்விட்டரில் இவரின் ஃபாலோவர்களுக்கு பதிலளித்துள்ள நிக்சன், "12-வது வீரராக மேட்ச் பிக்ஸிங் தரகர் கண்டிப்பாக ஈடுபட்டிருக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.

பால்நிக்சனின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் சூதாட்டம் குறித்து தனது புத்தகத்தில் நிகசன் சர்ச்சையை கிளப்பியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Post a Comment

Previous Post Next Post