உடலை முழு நிர்வாணமாகக் காட்டும் ஸ்கேன் எந்திரத்திற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மனிதர்களின் உடலை ஆடைகள் இன்றி துல்லியமாக ஸ்கேன் செய்யும் இந்த இயந்திரங்கள், அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு விமான நிலையங்களில் இந்த ஸ்கேனர் கருவிகள் 2007ம் ஆண்டில் பரிசோதனை செய்யப்பட்டு விமான நிலையங்களில் நிறுவப்பட்டன. இதில் பயணிகளின் முழு உடலும் நிர்வாணமாகத் தெரியும். எனினும், கட்டுப்பாட்டறையில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரி மட்டுமே இதை பார்ப்பதால், தவறுக்கு வாய்ப்பில்லை என்று நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஸ்கேனரினால் மனித உரிமையை மீறுவது போல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் புகாரினை அடுத்து, இதுபோன்ற ஸ்கேனர்களை படிப்படியாக அகற்ற போக்குவரத்து பாதுகாப்புத் துறை முடிவு செய்து அதனை செயல்படுத்தி வருகிறது.
Tags
தொழில்நுட்பம்
.jpg)