கிரிக்கெட் வீரர் ரங்கன ஹெராத் மரணம்! ட்விட்டரில் பரவிய வதந்தியால் பரபரப்பு.


இலங்கை கிரிக்கெட் வீரர் ஹெராத் மரணம் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் சில ட்விட்டரில் பாவனையாளர்களால் பரப்பிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் சிட்னி நகரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் உயிரிழந்ததாகவும், மேலும் முன்னாள் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் காயமடைந்துள்ளதாகவும் டுவிட்டரில் தகவல் வெளியானது.

இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஆனால் இந்த தகவல் கிரிக்கெட் வீரர் ஹெராத்துடன் இருந்த சக கிரிக்கெட் வீரர்களுக்கும் தகவலாக சென்றதில் இது வெறும் வதந்தி என தெரியவந்தது.

Post a Comment

Previous Post Next Post