திஹாரிய கார்னட் சர்வதேச கல்லூரியின் முதலாவது கண்காட்சி நேற்று (20-01-2013) மிகவும் சிறப்பாக ஆரம்பமானது.
படைப்பாற்றல் மிக்க திறமையான மாணவர்கள் சுமார் 400 இற்கும் மேற்பட்டவர்களின் படைப்புக்களுடன் ஆரம்பமான இக்கண்காட்சியின் திறப்புவிழாவில் கார்னட் சர்வதேச கல்லூரியின் அதி உயர்பீட நிர்வாக சபை உறுப்பினர்களான அல்ஹாஜ் M.T சாலி முஹம்மட், கார்னட் சர்வதேச கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி அப்ஹம் சாலி, கார்னட் சர்வதேச கல்லூரியின் அதிபர் மௌலவி M.S. மஹ்ரூப் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட சகோதர பாடசாலை மாணவர்கள் மற்றும் மத்ரஸா மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இக்கண்காட்சி இன்று (21-01-2103) மாலை 4 மணிவரை நடைபெறும்.
Tags
திஹாரிய செய்திகள்