இன்று காலை மல்வத்தை அப்சரா திருமண மண்டபத்திற்கு இற்கு அருகாமையில் நடைபெற்ற விபத்தில் பாதை அருகில் கஞ்சி விற்பனை செய்துவந்த பிரேம ரத்ன என்ற 64 வயதுடையா வியாபாரி பலியானார்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த மௌலவி லமீர் அவர்களுடைய காருக்கு மோதியே குறித்த வியாபாரி பலியானார். மௌலவி லமீர் அவர்கள் கொழும்பு இஹ்ஸானியா அறபுக்கல்லூரியின் ஸ்தாபகப் பணிப்பாளர் மர்ஹூம் அல்ஹாஜ் S. நியாஸ் மௌலவி அவர்களின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான பிரேம ரத்ன உடனடியாக வதுபிடுவல வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை மரணமானார். விபத்து நடைபெற்ற இடத்தில் கூடிய பிரதேச வாசிகள் தன் கையிலிருந்த ஹெல்மட்டால் மௌலவி லமீர் அவர்களுக்கு அடித்ததால் அவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சாரதிக்கு நித்திரை சென்றதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற் கட்ட விசாரணையின் பொழுது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags
திஹாரிய செய்திகள்
