ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது: அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை


ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது. அல்கொய்தா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உலமா சபை நிதியுதவி வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டு அடிப்படைத் தன்மையற்றது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

சுமார் 85 சதவீதமான சிங்கள் வர்த்தகர்கள் ஹலால் சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளனர். ஹலாலுக்கு எதிரான குறிப்பிட்ட சிலரின் எதிர்ப்பினால் அனைத்து வர்த்தகர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, ஹலாலுக்கும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அச்சபை வலியுறுத்தியுள்ளது.

நன்றி : வீரகேசரி 

Post a Comment

Previous Post Next Post