பிரபல கிரிக்கெட் வீரர் பிரவீண் குமாருக்கு மனநிலை பாதிப்பா?


இந்தியா அணியின் மித வேகப் பந்துவீச்சாளர் பிரவீண் குமாருக்கு மனநிலை பாதிக்கப் பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியில் நடுவருடன் அவசியமற்று வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளாலும் திட்டியதுடன் சக வீரர்களுடனும் முறைத்துக் கொண்டதாகக் கூறப் படுகிறது. பிரவீண் குமார் களத்தில் சண்டையிடுவது முதன் முறையல்ல. இதற்கு முன் பல முறை இப்படி நடந்துள்ளார். 2008ல் மீரட் நகரில் மருத்துவர் ஒருவரை தாக்கியதாகவும் புகார் உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ), தனஞ்சய் சிங் அறிக்கை அளித்தார். அதில், "மைதானத்தில் விதிகளை மீறி செயல்படுகிறார். சில நேரங்களில் பொறுமை இழந்து விடுகிறார். எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார். சில நேரங்களில் தனது அணி வீரர்களிடமும் இப்படி நடக்கிறார். போட்டிகளில் விளையாடும் அளவுக்கு மனநிலை சரியில்லை" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரவீண் குமார் கடைசியாக ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு (2012, மார்ச்) எதிரான ஒருநாள் போட்டியில் கடைசியாக பங்கேற்றார். மீண்டும் காயம் காரணமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.


Post a Comment

Previous Post Next Post