வெடித்துச் சிதறும் செம்சுங் ஸ்மார்ட் போன்கள்!

தென்கொரியாவில் நபரொருவரின் செம்சுங் கெலக்ஸி நோட் ஸ்மார்ட் போன் வெடித்ததில் அவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

குறித்த நபர் தனது காற்சட்டையின் வலது பக்க பொக்கெட்டுக்குள் ஸ்மார்ட் போனை வைத்திருந்துள்ளார். இதன்போது அச் ஸ்மார்ட் போன் வெடித்ததனால் அவரது வலது தொடையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் அவரது காற்சட்டையும் எரிந்துள்ளது.  எனினும் குறித்த நபர் இவ்விடயம் தொடர்பில் செம்சுங் நிறுவனத்திற்கு இதுவரை அறிவிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மேலதிக பெட்டரி ஒன்றையும் தனது ஸ்மார்ட் போனுடன் காற்சட்டைப் பொக்கெட்டில் வைத்திருந்ததாகவும் இதன் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக லித்தியம் ஐயன் பெட்டரிகள் வெளிப்புற அமுக்கம் மற்றும் வெப்பநிலை மாற்றம் போன்ற காரணங்களால் தீப்பற்றி எரியக்கூடியதெனவும் எனவே இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் செம்சுங் நிறுவன பேச்சாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கடந்த வருடம் பாடசாலை மாணவரொருவனின் செம்சுங் கெலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட் போன் வெடித்த சம்பவமொன்று தென் கொரியாவின் குவாங்ஜூவில் பதிவாகியிருந்தது.

மேலும் செம்சுங் கெலக்ஸி எஸ் 2 ஸ்கை ரொக்கெட் ஸ்மார்ட் போன் வெடித்துச் சிதறிய சம்பவம் தொடர்பான செய்தியும் அண்மையில் வெளியாகியிருந்தது.

பொதுவாக கையடக்கத்தொலைபேசிகளை அதிக சூடான மற்றும் அவற்றின் மீது அதிகம் அலுத்தம் ஏற்படக்கூடிய வகையில் வைத்திருத்தல், நீண்ட நேரம் சார்ஜ் செய்தல், சார்ஜ் செய்யும் நேரம் உபயோகித்தல் போன்றவை அவை வெடிப்பதற்கான காரணங்களாக அமைகின்றன.

இவற்றைத்தவிர தரம் குறைந்த பெட்டரி, சார்ஜர் போன்றவற்றை உபயோகிப்பதும் அவற்றின் உகந்ததல்ல. இதன் மூலமும் வெடிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

செம்சுங் மட்டுமன்றி, அப்பிளின் ஐபோன்கள் வெடித்துச் சிதறிய சம்பவங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : வீரகேசரி 

Post a Comment

Previous Post Next Post