Twitter மீது மீது ஹெக்கர்கள் கைவரிசை! :2 1/2 பேரின் கணக்குகள் பாதிப்பு.


டுவிட்டர் தளம் ஹெக்செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் பேரின் கணக்கு விபரங்கள் திருடப்பட்டுள்ளன. இத்தகவலை டுவிட்டர் உறுதிசெய்துள்ளது.

ஹெக் செய்யப்பட்ட கணக்குகளின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கடவுச் சொற்கள் திருடப்பட்டுள்ளதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றியதாகவும் இது தொடர்பில் கணக்கு உரிமையாளருக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளதாகவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பாவனையாளர்கள் தங்களது கடவுச்சொல்லை மாற்றுமாறும் டுவிட்டர் அறிவுறுத்தியுள்ளது.
இத்தாக்குதல் மிகவும் நுணுக்கமான  முறையில் நன்கு பயிற்சி பெற்ற ஹெக்கர்களால் முன்னெடுக்கப்பட்டூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எவ்வாறு டுவிட்டர் கணக்குகள் ஊடுருவப்பட்ட என்பது தொடர்பில் டுவிட்டர் இதுவரை தகவல் எதனையும் வெளியிடவில்லை.

இதேவேளை அமெரிக்க ஊடகங்களான நிவ்யோர்க் டைம்ஸ் மற்றும் வொஷிங்டன் போஸ்ட் ஊடகங்களின் இணையக்கட்டமைப்பின் மீதும் ஊடுருவல்காரர்கள் தமது கைவரிசையை காட்டியிருந்தனர்.

இவ்விரு நிறுவனங்களும் இத்தாக்குதலுக்கு சீனாவே காரணமென குற்றஞ்சாட்டியிருந்தன.

கடந்த சில வருடங்களாக அமெரிக்க நிறுவனங்கள் மீது இத்தகைய நாடொன்றின் அனுசரணையுடன் (state-sponsored hacking) நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய தொடர் தாக்குதலால் ஒபாமா அரசானது சீனா அதன் நாசகார நடவடிக்கைகள் தொடர்பில்  கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post