கணினி வந்த பிறகு டைப்ரைட்டர்களில் டைப் செய்யும் வழக்கம் குறைந்துவிட்டது. ஆனால் இன்னமும் சில அரச நிறுவனங்களில் டைப்ரைட்டர் உபயோகப்படுத்தும் பழக்கம் உள்ளது. இவர்களுக்கு எல்லம் ஒரு வருத்தமான செய்திதான் இது.
டைப்ரைட்டரை உருவாக்கி வெளியிட்டு வந்த கடைசி நிறுவனமான மும்பையில் உள்ள Godrej and Boyce தனது கடைசி தொழிற்சாலையை மூடி விட்டது.
2009ஆம் ஆண்டு வரை ஒரு ஆண்டுக்கு 10,000 முதல் 12,000 டைப்ரைட்டர்களை தயாரிப்பு செய்து வந்தது இந்த நிறுவனம்.
தொழிற்சாலையை மூடும் பொழுது வெறும் 200 டைப்ரைட்டர்களே விற்கப்படவிருந்தது. இந்நிலையில் நிறுவனம் தன்னுடைய கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையையும் மூடி விட்டது. இனி கணினி காலம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மற்றும் பயிற்சி நிறுவனங்களும் என்ன செய்ய போகின்றன புதிய டைப்ரைட்டருக்கு என்று தெரியவில்லை.
இனி டைப்ரைட்டரினை அருங்காட்சியங்களில் மட்டுமே காண இயலும் என்ற நிலைமை வர இன்னும் சில வருடங்களே உள்ளது.
Tags
தொழில்நுட்பம்
