(மஸிஹுதீன் இனாமுல்லாஹ்)
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் திரு கோதாபே ராஜபகஷே அவர்களுக்கும் இடையில் பௌத்த மதகுருமார் சகிதம் நேற்று இடம் பெற்ற பேச்சுவாரத்தையில் "ஹலால் " சான்றிதழ் வழங்குவதனை நிறுத்துவதற்கான உடன் பாடு காணப் பட்டதாக இன்று லங்காதீப பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்பாக கருத்து தெரிவித்த ஜம்மியாஹ்வின் பிரதிநிதி ஒருவர் : முஸ்லிம்களுக்கு ஹலால் எவ்வளவு முக்கியம் என்பதனை பௌத்த மத குருமார் நன்கு புரிந்து கொண்டு கதைத்ததாகவும் அதேபோல் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஹலால் சான்றிதழ் அத்தியாவசியமானதென்பது குறித்தும் பேச்சு வார்த்தைகளின் பொது ஆராயப் பட்டதாகவும் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளுடன் இன்று 09/03/2003 கலந்துரையாடி ஏற்றுமதி தேவைகளுக்கான சான்றிதல்களை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்து ஆராயுமாறு தாம் வேண்டிக் கொள்ளப் பட்டதாகவும் அவ்வாறு ஆராயப்பட்டு எடுக்கின்ற ஒரு பொறிமுறையை அமைச்சரவை செயற்குழுவிடம் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு பாது காப்பு செயலாளர் தெரிவித்ததாகவும் மேற்படி ஜம்மியஹ்வின் பிரதி நிதி தெரிவித்தார்.
இன்று காலை இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் கூடிய வர்த்தகர்கள் சகலரும் ஹலால் சான்றிதழ் தமது உற்பத்தி சந்தைபடுத்தல் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு அவசியம் தேவை என்பதனை வலியுறுத்தியுள்ளனர்.
எனவே உள்நாட்டு சந்தைப் படுத்தலுக்கு ஒரு விதமாகவும் முஸ்லிம்களுக்கும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு வேறு ஒரு விதமாகவும் உற்பத்திகளை மேற்கொள்தல் பெரும் சிக்கலான உற்பத்திச் செலவினங்களை அதிகரிக்கின்ற அதேவேளை நம்பகத் தன்மையை பாதிக்கின்ற ஒரு நடைமுறையில் சிக்கலான பொறிமுறை என்பதிலும் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.
எது எப்படிப் போனாலும் இந்த பொதுபல சேனா சிங்கள பௌத்தர்களுக்கும் அவர்களது பொருளாதாரத்திற்கும் காவலர்கள் என்று கூறி அவர்களது பொருளாதாரத்தை இன்று கேள்விகே குறியாக்கியுள்ளதோடு ஹலால் சான்றிதழுக்காக யார் யார் காலிலோ மண்டியிட வைத்துள்ளது.
குறுகிய சுரண்டல் நோக்கங்களுடன் முஸ்லிம்கள் மாத்திரம் ஹலால் உற்பத்திகளை சந்தைபடுத்தல்களை ஏற்றுமதிகளை மேற்கொள்ளாது இலங்கையின் பொருளாதாரத்திற்கு தேசப் பற்றுள்ள முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் மூலம் எத்தகைய பங்களிப்பினைச் செய்துள்ளார்கள் என்பதனை இன்று பொது பல சேனா உலகறியச் செய்துள்ளது.
ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவது முழுமையாக ஒழிக்கப் படுமானால் இலங்கை பொருளாதார ரீதியிலாக மாத்திரமன்றி அரசியல் இராஜ தந்திர ரீதியில் அரபு முஸ்லிம் உலகில் பெரும் அபகீர்த்தியை அடைந்து கொள்ள வேண்டி எற்படும் என்பதில் சந்தேகமில்லை.
தேசப் பற்றுள்ள முஸ்லிம்கள் இந்த நாட்டின் அரசிற்கும் பொருளாதாரத்திற்கும் அன்று போல் இன்று போல் என்றும் தமது பங்களிப்பை வழங்க தயாராகவே இருக்கிறார்கள் என்பதனை ஜனாதிபதி ,பாதுகாப்புச் செயலாலர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் மாத்திரமல்லாது பௌத்த மத குருமாரும், வர்த்தகர்களும், புத்தி ஜீவிகளும், பொருளாதார நிபுணர்களும் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழ் வழங்குவதனை நிறுத்தினால் முஸ்லி ம்கள் ஹலாலான உணவு மற்றும் பாவனைப் பொருட்களை கொள்வனவு மற்றும் நுகர்வு செய்வர் ஆனால் பாதிக்கப் படப்போவது நமது தேசமே என கூட்டங்களில் கலந்து கொண்ட மத குருமார் உற்பட வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர்.
Tags
கட்டுரைகள்
