அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழ் வழங்குவதனை தற்காலிகமாக நிறுத்தி விட்டு அது தொடர்பான சகல விதமான பேச்சு வார்த்தைகளுக்கும் போவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சிங்கள பௌத்தர்களின் பொருளாதாரத்திற்கு ஹலால் சான்றிதல் ஆபத்தானது என விஷமப் பிரச்சாரம் செய்த "பொது பல சேனா" வும் அதனை பின்னால் நின்று இயக்கியவர்களும் ஹலால் சான்றிதழ் பெற்று வர்த்தகம் செய்யும் 85% வீதமான சிங்கள பௌத்த வர்த்தகர்களினதும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் புத்தி ஜீவிகளின் பெரும் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அரசாங்கத்தின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திலும் வெளிநாட்டுச் செலாவணி உழைப்பிலும் ஹலால் சான்றிதழ் பாரிய தாக்கத்தினை செலுத்துவதால் ஜம்மியத்துல் உலமா அன்றி அரசாங்கமே சகல தரப்புக்களாலும் நம்பத் தகுந்த ஒரு முறையினை அறிமுகப்படுத்த வேண்டும்.
உள்நாட்டு முஸ்லிம்களின் நுகர்விற்கு கூடிய விலையில் ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்கள் சந்தைப் படுத்தப் பட வேண்டும் என்பது தவறு.
ஹலால் சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் தற்போது கோடிக்கணக்கில் மாத மொன்றிற்கு நஷ்ட அடைகின்றனர் என்றால்; ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் இலாபத்தினை கருத்திற்கொண்டு உள்நாட்டு முஸ்லிம்களின் நுகர்வுக்காக சந்தைப் படுத்தப் படும் ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களின் விலைகளை குறிக்க வேண்டுமே அல்லாது கூட்டி விற்பனை செய்வது உற்பத்தி சந்தைப் படுத்தல் கோட்பாடுகளுக்கு முரணான அநீதியாகும்.
அதே போல் ஹலால் சான்றிதழை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அபத்தமானது. சுதேச பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பினை வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒரு தரச் சான்றிதழை முஸ்லிம்கள் தமது செலவில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுவது பரிசுத்த முட்டாள் தனமாகும்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கண்காணிப்பின் முகாமைத் துவத்தின் கீழ் வரும் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனத்தினை நடாத்துவதற்கான முழு செலவினங்களையும் கட்டமைப்பு வசதிகளையும் வேதனங்களையும் இலங்கை வர்த்தகர் சம்மேளனமும் வர்த்தகர்களும் அரசும் பொறுப்பெடுக்க வேண்டுமே அல்லது அப்பாவி முஸ்லிம்களின் தலையில் சுமத்த முடியாது. அது பெரும் அநீதியாகும்.
உள்நாட்டு சந்தையில் ஹலால் சான்றிதழ் இருக்கக் கூடாது என எவராவது மீண்டும் கொக்கரித்தால் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மாத்திரம் ஹலால் சான்றிதழ் வழங்குவதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவோ என்னய்யா முஸ்லிம் நிருவனான்களோ மேற்கொள்ளவே கூடாது.....! நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றேல், முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் தூக்கிய ஆயுதம் தங்கள் பக்கமேபக்கமே திரும்புவதனை பொது பல செனாவோ அல்லது அவர்களுக்கு பின்னல் இருப்பவர்களோ உணர்ந்து கொள்ளவும் மக்கள் தெரிந்து கொள்ளவும் உள்ள சந்தர்ப்பம் இல்லாமல் போய் விடும்.
Tags
கட்டுரைகள்
