ஹலால் என்பது ஆகுமாக்கப்பட்ட உணவாகும், நான் காலம் காலமாக ஹலால் உணவுகளையே உண்டுவருகிறேன், உடம்புக்கு தீங்கு விளைவிக்கும் எதுவும் ஹலால் உணவில் செர்த்துகொள்ளப் படுவதில்லை. அதனால் எனக்கு ஹலால் உணவுகள் தேவை. உங்கள் உடம்பை பாதுகாத்து, ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் நீங்களும் இந்த உணவுகளை உண்ணலாம் என கிராமிய அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார்.
நேற்று மாவனல்லை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர்
இந்த ஹலால் விவகாரத்தினால் எமக்கு மத்தியில் பிளவுகள் வருவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீங்கள் இந்த பிளவுகளில் பங்கெடுக்காது ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்
