இலங்கை முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள், இன விரோத செயற்பாடுகள் குறித்த முக்கிய பிரேரணையொன்றினை சமர்ப்பிக்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்பிரேரணையை சமர்ப்பிக்கும் முகமாக 50 பேருடன் சில புலம்பெயர் முஸ்லிம் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை நெதர்லாந்திலிருந்து ஜெனீவாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
அத்தோடு, இக்குழுவினர் இலங்கை அரசுக்கு ஆதரவான பிரேரணையொன்றையும் இதன்போது சமர்ப்பிக்கவுள்ளனர். இதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர் இலங்கை முஸ்லிம் அமைப்பின் தலைவர் றியாஸ் முஹம்மத் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பிறந்தகமாகக் கொண்ட நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராட்சியம், கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் புலம் பெயர் முஸ்லிம்களே இவ்வாறு ஜெனீவாவிற்குச் செல்லவுள்ளனர்.
இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக இனவிரோத செயற்பாடுகள், அரசியல் உரிமைப் பிரச்சினைகள், பள்ளிவாசல்கள் மீதான் தாக்குதல்கள் ஆகியன குறித்து சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமது அமைப்பு மேற்கொள்ளுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
