மாவன்னல்லையை பிறப்பிடமாகவும் திஹாரியை வசிப்பிடமாகவும் கொண்ட அல்-ஹாஜ் M .J.M. அப்துல் காதர் அவர்கள் திடீர் மரண விசாரணை அதிகாரியாக நேற்று (06-03-2013) அத்தனகல்ல நீதவான் திரு B.D.R. சிசிர குமார முன்னினையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் முன்னாள் ஜாமிஆ நளீமியாவின் வெளியீட்டுப் பணியகத்தில் உதவி வெளியீட்டாளராகவும், தற்பொழுது கம்பஹா பண்டாரவத்த வித்தியாவங்ச பிரிவெனாவில் தமிழ் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்னதாக திஹாரிய பிரதேசத்தை சேர்ந்த அல்-ஹாஜ் புவத் மாஸ்டர் மற்றும் மனீஸ் மாஸ்டர் ஆகியோர் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Tags
திஹாரிய செய்திகள்
