ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தால் விருதுகள் வழங்கி வைப்பு

ஜம்இய்யத்துத் தலபதில் இய்லாமிய்யா (ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின்) ஏற்பாட்டில் மேற்குப் பிராந்திய ஊழியர் ஒன்று கூடலும் இவ்வருடம் கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் 03ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிளமை திஹரிய அங்கவீனர் நிலைய கேட்போர் கூடத்தில்  ஜம்இய்யத்துத் தலபதில் இய்லாமிய்யா (ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின்) மேற்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான அஷ்ஷேய்க் ஏ.ஆர்.எம் அர்க்கம் (நலீமி)  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தேசிய தலைவரான எஸ்.எம்.சுபியான் (நளீமி) அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், விஷேட அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷேய்க் நபீஸ் (நலீமி) மற்றும் ஜம்இய்யாவின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது  அஷ்-ஷெய்க். எச்.எம் மின்ஹாஜ் (இஸ்லாஹி) மற்றும் அஷ்-ஷெய்க். உவைஸ் (இஸ்லாஹி) ஆகியோரது சிறப்புரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் போது இவ்வருடம் மேல் மாகாணத்தில் கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் 03ஏ சித்தி பெற்ற 20 மாணவார்களுக்கு பரிசில்கள் மற்றும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
படங்கள் : J -Media 

Post a Comment

Previous Post Next Post