அரசின் 1000 இடை நிலைப் பாடசாலைகளை மேன்படுத்தும் திட்டத்திற்க்கு திஹாரிய வாழ் மக்களின் பூரண ஆதரவு

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த மே மதம் 18 ஆம் திகதி கல்லூரி அதிபர் ஜனாப் M.T.M தௌஸீர் அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனிபா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர்
கௌரவ சரண குணவர்தன அவர்களின் சிபாரிசில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள 1000 இடை நிலைப்  பாடசாலைகளை மேன்படுத்தும் திட்டத்தில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நன்மை, தீமைகளை பெற்றோருக்கும் ஊர்மக்களுக்கும் விளக்கும் பிரதான நோக்குடன் இந்த பொதுக்கூட்டம் பெரும் தொகையான மக்கள் வெள்ளத்தின் மத்தியில் இடம்பெற்றது. 

 
 அதிபர் ஜனாப் M.T.M தௌஸீர்

அரசின் இத்திட்டத்தில் வடக்கு, தெற்கில் முஸ்லிம் பாடசாலைகள் எதுவும் தெரிவு செய்யப்படாத சமயத்தில் கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் பாடசாலை திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாய்ப்பு ர்ச்சட்வத்த  , உடுகொடை உட்பட முழு கம்பஹா மாவட்ட முஸ்லிம் மாணவர்களுக்கு தமது கல்விப் பாதையில் நம்பிக்கையுடன் வீரநடை போடுவதற்கு கிடைத்த ஓர் அறிய சந்தர்ப்பமாகும்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை, குறிப்பிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் பிரிந்து செல்லும் பிரச்சினை, குறைந்த வருமானமுடைய பிள்ளைகளுக்கு கல்வி கிடைக்காமை போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் தீர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன.

இத்திட்டத்திற்க்கு திஹாரிய வாழ் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பூரண ஆதரவு கிடைக்கப்பெற்றது. 

எமக்குக் கிடைத்துள்ள இவ்வரிய வாயிப்பினை ஒன்றிணைந்து பெற்றுக்கொள்வோம். பயன்பெறுவோம். சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மீக ரீதியாக முன்னேறிய தரமான சமூகமொன்றில் அங்கத்துவம்பெறுவோம்.
 

கூட்டத்தில் கலந்து சிறப்பித்த பெற்றோர் மற்றும் ஊர்மக்கள்

Post a Comment

Previous Post Next Post