பின்லேடன் மரணம் ஓ.பி.எல் இஸ் டெர்த் ! புதிய பனியன் !
பின்லேடன் இறந்ததுவிட்டார் என்று பேசுவதில் உலக மக்களில் நிறையப்பேர் காலத்தைக் கடத்துகிறார்கள். ஆனால் இந்த மரணத்தை எப்படி வர்த்தகமாக்குவது என்று திட்டமிட்ட அமெரிக்கரான மவுறிற் ஹர்ரி என்ற 23 வயது இளைஞர் புதிதாக சிந்தித்துள்ளார். பில்லேடன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை டிசைன் செய்து ரீ சேஷட்களில் அச்சடித்து அமோகமாக விற்பனை செய்து வருகிறார். மிகவிரைவாக பின்லேடன் மரணத்தை டிசைன் செய்து, பனியன்களில் அச்சடித்து, அதற்கான இணையப்பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் ரீஷேட்களை அமோகமாக விற்பனை செய்து கொண்டிருக்கிறார். திங்கள் இரவு செய்தி வந்ததும் களமிறங்கிய இவர் இதுவரை 10.000 ரீஷேட்களை விற்பனை செய்து ஆறு இலட்சம் டேனிஸ் குறோணர்களை உழைத்துவிட்டார். ஒரு ரீஷேட் 12 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகிறது. இவரைத் தொடர்ந்து மேலும் பலர் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வர்த்தகத்தில் குதித்துள்ளனர்.
Tags
உலகச் செய்திகள்

