வட மாகாணம் உட்பட பிற்போடப்பட்டுள்ள 70 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜூன் மாத நடுப்பகுதியில் அல்லது இறுதிப் பகுதியில் நடாத்தப்படுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளமையே இதற்கான காரணமென தேர்தல்கள் திணைக்கள உயரதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். வடக்கு உட்பட பிற்போடப்பட்டுள்ள 70 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இம்மாத இறுதியில் நடாத்துவதற்கு ஏற்கனவே உத்தேசித்திருந்த போதிலும் நீதிமன்ற விசாரணைகள் முடிவுறாமையால் தேர்தலை இம்மாத இறுதியில் நடாத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.