26 வயதுடைய அமெரிக்கரான டாலாஸ் வைன் விபத்தில் தனது முகத்தையும் பார்வையையும் முற்றாகப் பறி கொடுத்தார். இவருடைய கண்கள், மூக்கு முதலியன தீயில் எரிந்துவிட்டன. கடந்த 2008ம் ஆண்டு தேவாலயம் ஒன்றிற்கு மை பூசிக்கொண்டிருந்தபோது தவறுதலாக உயர் மின்னழுத்தம் உள்ள இடத்தின் மீது விழுந்து முகத்தை எரித்துக் கொண்டார். இந்த நிலையில் இவருக்கான புதிய முகம் மாற்றும் சத்திர சிகிச்சை சென்ற மார்ச் மாதம் நடைபெற்றது.
இப்போது இவர் படத்தில் காணும் புதிய முகத்தைப் பெற்றுள்ளார். பார்வையை மறுபடியும் பெற முடியாவிட்டாலும், மனித உருவில் நடமாடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முதலாவது முகம் மாற்றும் சத்திரசிகிச்சசை என்று இது வர்ணிக்கப்படுகிறது. உடலை தானமாகக் கொடுத்தவர்களின் உறுப்புக்கள் இவருக்குப் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 15 மணி நேரம் 30 சத்திரசிகிச்சை நிபுணர்கள் இணைந்து இப்பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். ஆனால் இந்தச் சத்திரசிகிச்சை ஒரு நாளில் நடைபெற்றதல்ல மொத்தம் 90 தினங்கள் செயற்கையான கோமா நிலையில் வைக்கப்பட்டே நடாத்தி முடிக்கப்பட்டது. நேற்று திங்கள் பத்திரிகையாளரை இவர் சந்தித்தார். வைத்தியர்கள் ஏறத்தாழ இவருடைய சொந்த முகத்தை உருவாக்கியிருப்பதாக உறவினர்கள் தெரிவித்தார்கள். எரிந்துபோன ஒருவருடைய முகத்தை மறுபடியும் உண்மையாகவே உருவாக்கியிருப்பது வைத்திய உலகின் புதிய சாதனையாகும்.
Tags
உலகச் செய்திகள்

