திஹாரியிலும் வெசக் கொண்டாட்டம்......

2600 சம்புத்த ஜயந்தி வெசக் கொண்டாட்டங்கள் இம்முறை உலகளாவிய ரீதியிலுள்ள பெளத்த மக்கள் வெகு விமர்சையாகக்  கொண்டாடிவருகின்றனர் . அந்த வகையில் இலங்கையிலும் ஜனாதிபதியால் வெசக் வாரம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையிலும் வெசக் விழாக்கள் களைகட்ட ஆரம்பித்தது.

அதனைத்தொடர்ந்து மூவின மக்களும் சகோதரர்களாக ஒன்றிணைந்து வாழும் எமது அழகிய திஹாரிய கிராமத்தில் மீண்டும் ஒருமுறை சகோதரத்துவத்தை வெளிக்காட்டும் வண்ணம் பெளத்த சகோதரர்கள் 2600 சம்புத்த ஜயந்தி வெசக் கொண்டாட்டத்தை  மிகவும் மகிழ்ச்சியாக கொண்டடிவருகின்றார்கள்.

வெசக் தினத்தை அலங்கரிக்கும் வண்ணம் வெசக் கூடுகளாலும் அழகிய வர்ண மின்குமில்களாலும் திஹாரிய கிராமம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் குளிர்பான அன்னதானங்களும்,  மஞ்சள் சோறு (கஹா பாத்) அன்னதானங்களும் வழங்கப்பட்டன. இவ் அனைத்து நிகழ்சிகளும் பொதுமக்களுக்கு எந்த ஒரு அசௌகரியத்தையும்  ஏற்படுத்தாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பாராட்டத்தக்கது. 

எமது காமராவுக்கு பதிவான சில புகைப்படங்கள்  





Post a Comment

Previous Post Next Post