ஜமாஅத்தே இஸ்லாமியின் திஹாரிய உப பிராந்தியம் ஏற்பாடு செய்த "இஜ்திமா"

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின்  திஹாரிய உப பிராந்தியம் ஏற்பாடு செய்த வருடாந்த இஜ்திமா நேற்று கல் எளிய அல் மஸ்ஜிதுல் சுப்ஹாணி ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது 

"அறிவியல் உலகை மூடியிருக்கும் அறியாமை இருள்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் கஹடோவிட, நாம்புளுவ  உட்பட பல பிரதேசங்களிலிருந்து மக்கள் கலந்து சிறப்பித்தனர்.  அறியாமை ஒரு வழிகேடு என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் எம். ஏ. எல். எம் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) மற்றும் வஹியின் ஒளியில் அறிவியல் என்ற தலைப்பில் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களாலும் உரைகள் நிகழ்த்தப்பட்டது. 







1 Comments

  1. உண்மையில் மிகவும் பயன்மிக்கதாகவே இந்த இஜ்திமா அமைந்திருந்தது. அல்-அஸ் ஹரில் தரம் 9ல் பயிலும் எனக்கே பிரயோசனமாக இருந்ததென்றால்...........

    ReplyDelete
Previous Post Next Post