மைக்கல் ஜாக்சன் இன்னும் உயிருடனா?

பொப்பிசை  மன்னன் மைக்கல்  ஜாக்சன் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி உயிரிழந்து விட்டதாக  உலக தொலைக்கட்சிகளில்  அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அவரது மரணம் உலகளாவிய ரீதியில் இருக்கும் அவரது ரசிகர்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியது. உலகமே ஒரு முறை அமெரிக்காவின் பக்கம் திரும்பியது.

அவரது மரணம் இயற்கை மரணமா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? அவரது சொத்துக்களுக்கு யார் உரிமைகோருவது ? இது அனைத்தும் அன்று மக்களிடையே இருந்த கேள்விகள். அதே சமயத்தில் அவரது கடைசி உயிலில் தான் மரணித்தால் தனது ரசிகர்களுக்கோ, ஊடகங்களுக்கோ தனது உடலைக்காட்டவேண்டாம்  என்று அதே நேரம் தன் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தை யாருக்கும் காட்ட வேண்டாம் என்றும் எழுதி இருப்பதாகவும் கூறப்பட்டது. அதே போன்றே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது வரை அவரது உடல் அடக்கம்  செய்யப்பட்ட இடம் அவரது நெருங்கிய உறவினர்கள் தவிர்ந்த வேறு யாருக்கும் தெரியாது.
 
இது இப்படி இருக்கையில் இப்போது புதிதாக ஒரு தகவல் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதுதான் மைக்கல்  ஜாக்சன் உயிரிழக்கவில்லை அவர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தான் பட்ட கடன்களை அடைக்கமுடியாமல் உலகிற்க்கு தான் இறந்து விட்டதாகவும். தற்போது மிகவும் இரகசியமான மறைவிடத்தில் இவர் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதை ஒப்புவிக்கும் வண்ணம் சில இரகசிய வீடியோக்களும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் எவ்வளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குறியே. 
 

Post a Comment

Previous Post Next Post