திஹாரியின் முதலாவது இணைய செய்திச் சேவை

அஸ்ஸலாமு அழைக்கும் 

எல்லாப் புகழும்  அல்லாஹ்விற்கே !அல்ஹம்துலில்லா!


நாளுக்கு நாள் வியத்தகு பல மாற்றங்களை ஏற்படுத்திவரும் இன்றைய 21ஆம் நூற்றாண்டில்  உலகை ஆட்டிப்படைக்கக்கூடிய சக்தியாக ஊடகத்துறை விளங்குகிறது.

இந்த நவீன ஊடகத்துறையானது எமது இலங்கையில் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார மாற்றங்களிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நமது திஹாரிய நியூஸ் நம் ஊர்மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றிலிருந்து ஊடகப்பயணத்தில் உத்தியோகபூர்வமாக கால்ப்பதிக்கிறது.

திஹாரிய ஊடக வரலாற்றில் புதியதொரு புரட்சிப் பயணத்தை திஹாரிய நெட்வேர்க் கடந்த 2010ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் முதலாம் திகதி பிரபல சமூகவலைப்பின்னலான FACEBOOK ஊடக Thihariya News 1st என்ற பெயரில் ஆரம்பித்த எமது சேவை  இன்று 220 இற்கும் மேற்பட்ட வாசகர்களுடன் வெற்றி நடை போடுகிறது. அத்துடன் நின்றுவிடாமல் துரிதகதியில் மக்களுக்கு செய்திகள் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் கையடக்கத்தொலை பேசியிற்க்கு செய்திகளை வழங்கும் சேவையாக Thihariya Alert 1st  சேவையினை  மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்தது. இந்த இரண்டு சேவைகளும் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அனைவரும் அறிந்ததே.

உயிர் துடிப்புள்ள, வீச்சும் வேகமும் கொண்ட மக்களின் நலன்களையே மூட்ச்சாகக்கொண்ட  ஊடகமாக எமது திஹாரிய நியூஸ் விளங்குவதற்கு திஹாரிய மக்களாகிய நீங்கள் எம்முடன் இணைந்திருந்து ஊக்கமும் உற்சாகமும் அளிப்பீர்கள் என்று நாம் எதிபார்க்கிறோம். அதே நேரம் உங்களுக்கு தெரிந்த செய்திகளையும் எமக்குத்தந்து எமது இந்த பயணத்திற்க்கு உதவியாக இருப்பீர்கள் என்றும் நம் எதிபார்க்கிறோம்.

குறிப்பு: எமது இந்த செய்திச் சேவை எந்த ஒரு கட்சிக்கோ, மார்க்கப் பிரிவினர்களுக்கோ, தனிப்பட்ட ஒருவரின் நலத்திற்கோ செயற்படாது என்பதை அறியத்தருகிறோம்.

வஸ்ஸலாம்
திஹாரிய நியூஸ் - ஆசிரியர்  






3 Comments

  1. மாஷா அல்லாஹ்..! உங்களது இந்த ஆரம்பம் திஹாரியின் வளமான எதிர்காலத்திற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறேன்.
    உங்களது முயற்சிகளை அல்லாஹ் அங்கீகரிப்பானாக..!

    ReplyDelete
  2. rizan from london

    i really appreciate the hardwaork towards thihariya coomunity May AALAH bless all work hard on this community development.proud to b one of thihariya community

    ReplyDelete
  3. Be thankful for what you have; you'll end up having more. If you concentrate on what you don't have, you will never, ever have enough.
    DR.HM

    ReplyDelete
Previous Post Next Post