இன்று உலக அன்னையர் தினம்


உலகம் முழுவதும் இன்று 08-05-2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா நாட்டின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தை சேர்ந்த அன்னா எம்.ஜர்விஸ் என்ற பள்ளி ஆசிரியை, தனது தாயார் மறைவுக்கு பிறகு, அவரது தியாகத்தை நினைத்து அன்னையர் தினம் கொண்டாட விரும்பினார். அன்னையர் தினத்தின் அவசியத்தையும் ஆட்சியில் இருந்தவர்களுக்கு கடிதம் மூலம் எழுதினார்.


இந்த நிலையில், அன்னையர் தினத்தை கொண்டாடும் விதமாக அன்னா ஜார்விஸ், தனது தாயாருக்கு பிடித்த பூ, அலங்கார பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, தான் செல்லும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றார். அங்குள்ள மக்களிடம் அதை வழங்கி தங்கள் வீடுகளுக்கு சென்று தாயாரிடம் வழங்கி கவுரவிக்குமாறு கூறினார்.

அதனைத் தொடர்ந்து அன்னையர் தினம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய தொடங்கியது. 1914 ம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன், ஆண்டு தோறும் மே மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.


அதன்படி, ஆண்டுதோறும் மே மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post