HOLCIM FA CUP - 2011 உதைப்பந்தாட்டப் போட்டிகளில் - திஹரிய யூத்

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் HOLCIM FA CUP - 2011 உதைப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமானது.

இப்போட்டியில் எமது ஊரை பிரதிநிதித்துவப்படுத்தி திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் விளையாடியது. அந்த வகையில் திஹாரிய யூத் முதலாவது போட்டியாக ஏப்ரல் 9 ஆம் திகதி கொழும்பு எவரடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் போட்டியிட்டு 7-2 என்ற ரீதியில் வெற்றியீட்டி இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது. இப்  போட்டியில் திஹாரிய யூத் சார்பாக யாசர் 2, இர்பான் 2, சாஜித் 2, சிராஸ் 1 என்ற வீதத்தில் கோல்களைப் பெற்றுகொடுத்தனர்.

இரண்டாம் சுற்றில் கொள்ளுபிடிய  யுனைடட் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து 6-4 என்ற ரீதியில் வெற்றியீட்டியது. இப்போட்டி கடந்த 04-05-2011 ஆம் திகதி வெள்ளவத்த குரே பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த வெற்றியைத்தொடர்ந்து மூன்றாம் சுற்றுக்குத் தெரிவான திஹாரிய யூத் பேருவளை பார்பேரியன்  விளையாட்டுக்
கழகத்தை எதிர்த்து நேற்று 07-05-2011 பேருவளையில் விளையாடியது. இப் போட்டியில் 4 - 3 என்ற ரீதியில் பெனால்டியில் தோல்வியத்தளுவியது.

இத்தோல்வியை அடுத்து HOLCIM FA CUP - 2011 உதைப்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் வெளியேற்றப்பட்டது. 

1 Comments

  1. கஹட்டோவிடாவில் இநதத்திருப்பு முனை எப்போதோ பல வருடங்களிற்கு முன்னர் நிகழ்ந்து விட்டது. பாடசாலை ரிஸல்டில் மட்டுமல்ல எல்லாத்திலும் கஹட்டோவிட முதலிடம்தான்...!
    www.kahatowitanet.tk, www.kahatovitanet.tk

    ReplyDelete
Previous Post Next Post