IPL லில் இருந்து ஷேன் வோன் விலகுவதாக அறிவிப்பு.

ஐ.பி.எல்., டுவென்டி - 20 போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது ஐ.பி.எல்., சீசன் 4 போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டி முடிந்த பிறகு இனிமேல் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. தற்போது ஷேன் வோன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 
ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல் லில் ராஜஸ்தான் ராயல் அணியின் பயற்சியாளர் மற்றும் கேப்டனான ஷேன் வார்னே ஐ.பி.எல் லில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். 
ஐ.பி.எல் லில் அடுத்த சில ஆட்டங்கள்தான் எனக்கு கடைசியாக இருக்கும் என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
இப்போது எனக்கு நல்ல நேரமாக உள்ளது. ஆனால் ஐ.பி.எல் லுக்கு குட்பை சொல்லும் நேரமும் இதுதான் என அவர் குறிப்பிட்டார். 
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான அடுத்த 2 உள்ளூர் போட்டிகளில் ஆதரவு தாருங்கள். உங்களுடைய ஆதரவு தேவை என அவர் தெரிவித்தார். 
ஐ.பி.எல் லீக் தொடங்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றவர் வார்னே. வெளியேறும்போது அதைவிட அதிகமான சாதனையுடன் வெளியேற வேண்டும் என்று விரும்புகிறார். 
ஐ.பி.எல் லில் 4  சீசன்களிலும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலேயே இவர் இடம்பெற்று வந்துள்ளார்.

அவருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ஆதரவு அளித்த அனைவருக்கும் வார்னே நன்றி தெரிவித்தார். 
சகவீரர்களாகிய உங்களுக்கு நன்றி கூறினால் நீங்கள் அதை உற்சாகமாக விளையாடுவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வார்னே குறிப்பிட்டார். 
இறுதியாக எதிர்வரும் ஐ.பி.எல் சீசனில் ஆலோசகராக தன் பணியைத் தொடர்வதை மறுப்பதற்கில்லை என வார்னே தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post