இந்தியாவில் நடைபெற்று வரும் IPL போன்று இலங்கையிலும் இனிவரும் காலங்களில் SLPL T20 சுற்றுப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பஸ்நாஹிர, கந்துரட்ட, நெகேனஹிற, ருஹுன, உத்துர, ஊவா மற்றும் வயம்ப ஆகிய ஏழு அணிகளாகப் பிரிக்கப்பட்டு நடாத்தப்படவுள்ளன.
இப்போட்டிக்கான அணித்தலைவர்களாக சங்ககார, மஹேல, சனத், வாஸ், தில்ஷான், அப்ரிடி, விட்டோரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அணிகளுக்கான இலாஞ்சனைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணி வீரர்களும் ஏனைய இந்திய, அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்க அணி வீரர்களும் இதில் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளில் அதிகமான போட்டிகள் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் சில போட்டிகள் மாலை 8 மணி முதல் 12 மணி வரையும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் யாவும் ESPN, CRICINFO மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
