அண்மையில் இலங்கையின் கஹடகஸ்டிகிலிய நீதிமன்றத்தால் அஸ்ட்ரா மாஜரின் உற்பத்தியாளர்களான இலங்கை யுனிளிவர் நிறுவத்திற்க்கு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில் இனிமேல் அஸ்ட்ரா மாஜரின் உரையில் இது மூன்று வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததல்ல எனும் வார்த்தை பிரயோகத்தை சேர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் இந்த மாஜரின் E-319 எனும் இரசயான பதார்த்தமான Tert-Butyl Hydro Quinone (TBHQ) ஐ கொண்டுள்ளது. இது ஒரு பெற்றோலிய சார்ந்த எதிர் ஆக்சிஜனேற்றி ஆகும். இது குமட்டல், வாந்தி, மூளைகோளாறு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்த வல்லது. இதை 5g ற்கு மேல் நுகர்தல் பாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. இந்த வகை இரசாயனம் குறிப்பாக குழந்தைகளுக்கு உகந்ததல்ல. இந்த இராசயானம் குறிப்பாக உணவு வகைகளில் நிறத்தை கொண்டு வருவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
இதன் பாவனை பற்றிய விடயத்தை இலங்கை மருத்துவ ஆய்வு மையத்தை சேர்ந்த டாக்டர் அணில் சமரநாயக உறுதி செய்துள்ளார். இப்பதார்த்தத்தின் பாவனை மேற்கு உலக நாடுகளில் பெரும்பாலும் தடைப்பட்டதாகவே இருக்கிறது.
குழந்தைகள் மாத்திரமன்றி பெரியவர்களும் இதனை பாவனையில் இருந்து குறைத்துக்கொள்ளுதல் நன்று.
இந்த பதிவினை யுனிளிவர் நிறுவனத்திற்கு எதிரான பிரச்சாரமாக கருத வேண்டாம்.
ஆதாரம்: Gossiplanka News / lankapuvath / UKfoodguide.net
