"தஃவா முஅஸ்கர்" மேற்குப் பிராந்திய இளைஞர் மகாநாடு திஹாரியில் (புகைப்படங்கள் இணைப்பு)

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  மேற்குப் பிராந்திய இளைஞர்  மகாநாடு  "தஃவா  முஅஸ்கர்" நேற்று மாலை திஹாரிய தூல்மலை அங்கவீனர் நிலையத்தின் கேட்போர்கூட அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

"பொறுப்புக்களுக்கு முன்னால் இன்றைய இளைஞன்"  என்ற தலைப்பில் நடைபெற்ற இம் மகாநாட்டில் அஷ்ஷெய்க் அfப்பான் (நளீமி),  அஷ்ஷெய்க் ஹுசைன் (நளீமி) ஆகியோர் விசேட உரையாற்றினார்கள். இன் நிகழ்வின் மற்றுமோர் விசேட அம்சமாக பஹ்ரேன் இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன்  மேற்குப் பிராந்திய பாடசாலைகளுக்கிடையில்  நடாத்திய பொது அறிவுப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இன் நிகழ்வில் கொழும்பு, கல்-எளிய, மினுவாங்கொட உட்பட திஹாரிய இளைஞர்கள் சுமார் 300 பெயரளவில் கலந்து சிறப்பித்தனர்.

 









Post a Comment

Previous Post Next Post