SAF Games ( South Asian Federation) - 2011 இற்கு தெரிவாகியிருக்கும் 16 வயதுக்கு குறைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில், அதிபர் ஜனாப் M.T.M தௌசீர் அவர்களின் தலைமையில் இயங்கும் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் இரு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இப்பாடசாலையின் விளையாட்டுத் துறைத் தலைவராக ஜனாப் M.I.M. ரூமி ஆசிரியர் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தகது.
திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பிரபல உதைபந்தாட்ட பயிற்ருவிப்பாளர், அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் ஜனாப் பஹுமி PTI AF -AFC "C" license Coach பயிற்ருவிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் பயிற்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் பதினாறு வயதுக்கு குறைந்த அணியில் விளையாடும் அஷி , உஸ்மான் ஆகிய இருவருமே இச் சுற்றுப்பயனத்துக்குத் தெரிவாகியிருக்கும் வீரர்களாவர். இப் போட்டியின் பிரதான கோல் காப்பாளராக திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் வீரர் உஸ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் வீரர் சர்வான் அவர்களின் தலைமையிலான 20 பேர் கொண்ட இலங்கை அணியில் முதல் 11 வீரர்களின் பெயர் பட்டியலில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் இரு வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஈரான், இந்தோனேசிய ஐந்தாவது ஏசியன் சுற்றுலாக்களில் கலந்துகொண்ட இந்த இரு வீரர்களும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
எதிவரும் ஒர்கஸ்ட் முதலாம் திகதி நேபாளில் ஆரம்பமாகவிருக்கும் இப் போட்டிக்கு இலங்கை அணியினர் எதிவரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பயணிக்கவுள்ளனர். இந்த அணியில் பயிற்ருபிப்பாளராக AFC பயிற்ருவிப்பாளர் சுமித் வல்பொல அவர்களும், உதவிப் பயிற்ருவிப்பாளர் I.E. விக்ரமசிங்க AFC "B" license Coach) அவர்களும் கடமையற்றுகிரார்கள்.
சுற்றுலாவுக்கு முன்னர் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான பயிற்சிப் போட்டியில் 5-0 என்ற ரீதியில் வெற்றியீட்டியது. இப் போட்டி பத்தேகம தேசிய பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெற்றது.
சுற்றுலாவுக்கு முன்னர் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான பயிற்சிப் போட்டியில் 5-0 என்ற ரீதியில் வெற்றியீட்டியது. இப் போட்டி பத்தேகம தேசிய பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெற்றது.