கலகேடிஹேனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் வேன் மோதியதில் மூவர் வைத்தியசாலையில்

இன்று மாலை 3.45 மணியளவில் கலகேடிஹேன ஹெலா குலோத்திங் இற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று மோதியதில் முச்சக்கரவண்டியில் இருந்த மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  

வேனிட்க்கு சிறிதளவு சேதங்கள் ஏற்பட்டபோதும் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான இரு வண்டிகளும் சகோதர இனத்தவர்களின் என்பது குறிப்பிடத்தக்கது. 


புகைப்படங்கள்:  ஷையாப் - கலகேடிஹேன செய்தியாளர் 

Post a Comment

Previous Post Next Post