ஹார்ன் ஆப்ரிக்காவில் கடுமையான வறட்சி உள்ளது. இந்த வறட்சியை போக்குவதற்கு துருவப்பகுதியில் உள்ள ராட்சதப் பனிக்கட்டிகளை கொண்டு வர முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
5 லட்சம் மக்களுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தரும் வகையிலான பனிக்கட்டியை இழுத்து வர முடியும். இந்தப் பனிக்கட்டி வருவதால் உலக வெப்பமயமாவதை தடுக்க முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
துருவப் பகுதியில் உள்ள பனிக்கட்டியை கொண்டு வரும் திட்டத்தை 1970ஆம் ஆண்டு பொறியியல் பட்டதாரி ஜார்ஜஸ் மோகின் அறிமுகப்படுத்தினார். அவரது கருத்தை துவக்கத்தில் சவுதி இளவரசர் ஏற்றார்.
அந்த இமாலய பனிக்கட்டியை இழுத்து வருவது அதிக செலவினம் கொண்டது என நிபுணர்கள் எச்சரித்தனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஜார்ஜஸ் கூறிய கருத்தை தற்போது புதிய கணணி தொழில்நுட்பம் சாத்தியமாக்கி உள்ளது.
86 வயது ஜார்ஜசை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் டாசல்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் அந்த திட்டம் குறித்து விவாதித்தது. பிரான்ஸ் கணணி வடிவமைப்புபடி 70 லட்சம் டன் பனிக்கட்டியை உருகாமல் 5 மாதத்திற்கு ஒற்றை இழுவை படகு மூலம் கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிக்கட்டி பல ஆயிரம் மைல் வரும் போது 525 அடி ஆழ பனிக்கட்டியில் 38 சதவீதம் மட்டும் உருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருவப்பகுதிகளில் 40 ஆயிரம் பனிக்கட்டிகள் உள்ளன. உலகின் 70 சதவீத தூய நீர் அங்கு உள்ளது. இந்த பனிக்கட்டி 3 கோடி டன் எடை கொண்டது. ராட்சத பனிக்கட்டி உருகாத வகையில் அதனை மூடி கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags
உலகச் செய்திகள்