ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதையடுத்து நாளை (31.8.2011) நோன்புப் பெருநாள் கொண்டாடுவதென அறிவிக்கப்பட்டுள்ளது.ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடியது.
இம் மாநாட்டில் உலமா நபை பிரதி நிதிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், பெரிய பள்ளிவாயல் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஷவ்வால் பிறை தென்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து நாளை நோன்புப்பெருநாள் என தீர்மானிக்கப்பட்டது.