2012 ஆம் ஆண்டு 20 க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரை இலங்கையில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. இது சம்பத்தமாக அறிவிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த புதன் கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் ஐ.சீ. சீ யின் 20 க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் அட்டவணையும், உத்தியோகபூர்வ இலச்சினையும் வெளியிடப்பட்டன. ஐ.சீ. சீ யின் பிரதம நிறைவேற்றதிகாரி ஹாருன் லோர்கட், இலங்கை கிரிக்கெட் உயர் அதிகாரிகள், மற்றும் 20 க்கு 20 உலகக்கிண்ணப் போட்டியின் இலங்கை அணித்தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.