Alert 1st மூலம் நடத்திய SMS போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கான பரிசில்கள் நேற்று வழங்கப்பட்டன.


புனித ரமழானை முன்னிட்டு திஹாரிய நெட்வேர்க், Alert 1st மூலம் நடத்திய SMS போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கான பரிசில்கள் நேற்று திஹாரிய SDF Nursing Home இல் வைத்து வழங்கப்பட்டன.

ரமழான் மாதத்தின் நான்கு வெள்ளிக்கிழமையிலும் கேட்கப்பட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு SMS மூலம் பதிலளித்த நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் கிழமைக்கு ஒரு வெற்றியாளர் வீதம் நான்கு வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன.

நிட்டம்புவ MLT சூப்பர் சென்டர் மற்றும் ஹலால் சிறி லங்கா ஆகிய நிறுவனங்களின் அனுசரணையில் நடைபெற்ற இப் போட்டி நிகழ்ச்சியில் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்ட திஹாரிய ஏலேர்ட் 1st நேயர்களுக்கும், அதே நேரம் இந்த போட்டி நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடாத்திமுடிக்க எமக்கு உருதுணையாகா இருந்த எமது அனுஷரணையாளர்கள் இருவருக்கும் திஹாரிய நெட்வேர்க் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள் இன்னும் பல நிகழ்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.


ஆகஸ்ட் 5 ஆம் திகதி வெற்றியாளர்:
ஹிஜ்ரா மாவத்தையைச் சேர்ந்த ஜனாப் ஹகீம் அவர்களுக்கான பரிசை அவரது மகன் டாக்டர் எம்.எஸ்.எம் மன்சூர் இடமிருந்து பெற்றுக்கொள்ளும் காட்சி. 

ஆகஸ்ட் 12 ஆம் திகதி வெற்றியாளர்:
ஊர்மனையச் சேர்ந்த செல்வி அஸீலா அகீர் அவர்களுக்கான பரிசை ஜனாப் ஜெஸூலி மஹ்ரூப் இடமிருந்து பெற்றுக்கொள்ளும் காட்சி.  

ஆகஸ்ட் 19 ஆம் திகதி வெற்றியாளர்:
லாபிர் ஹாஜியார் மாவத்தையைச் சேர்ந்த செல்வி பாத்திமா இல்மா அவர்களுக்கான பரிசை டாக்டர் எம்.எஸ்.எம் மன்சூர் இடமிருந்து பெற்றுக்கொள்ளும் காட்சி. 

ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெற்றியாளர்:
சென்ட்ரல் பிலேசை  சேர்ந்த செல்வி ருஸ்னா பாஸித் அவர்களுக்கான பரிசை அவரது தகப்பன் திஹாரிய நெட்வேர்க் ஆசிரியர் ஸப்ரான் எம் மன்சூர் இடமிருந்து பெற்றுக்கொள்ளும் காட்சி. 

Post a Comment

Previous Post Next Post