இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு இங்கிலாந்தின் லெய்செஸ்டெர் தெ மோன்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கௌரவக டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
செவ்வாய்கிழமை குறித்த பல்கலைக்கழகத்தின் லெய்செஸ்டர் அணியுடனாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்குகொண்ட நிலையிலேயே தோனிக்கு இக்கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எனினும் இதில் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. சுரேஷ் ரைனா கேப்டன்ஷிப் செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 161 ஓட்டங்களை எடுத்தது. முன்னைய பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய படேல், இப்போட்டியிலும் 31 பந்துகளில் 40 ரன்களை அதிரடியாக எடுத்தார். இதில் 6 பவுன்றிகலும் அடங்கும்.
பந்துவீச்சில் கோப் 2 விக்கெட்டினை வீழ்த்தினார். பதிலுக்கு களமிறங்கிய லெய்செஸ்டெர்ஷிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. மெக்டொனால்ட் 44 ஓட்டங்களை எடுத்தார். பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக்கும் லெய்செஸ்டர்ஷீர் அனிக்காக இப்போட்டியில் விளையாடினார். அவர் 24 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். பந்துவீச்சில் வினய் குமார் 3 விக்கெட்டுக்களையும், மிஷாரா 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டுவெண்டி 20 போட்டி ஆகஸ்ட் 31 ம் திகதியும், அதையடுத்து, 4 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன.
ஒரு நாள் தொடரையும் கைப்பற்றுவோம் என இங்கிலாந்து கேப்டன் அண்டிருவ் ஸ்டுராஸ் முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

