இன்று காலை 11 மணியளவில் கலகெடிஹேன பத்தல, ஹேனவத்தையில் அமைந்துள்ள சிறுவர் அனாதை இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிலந்துல்லன்.
இரண்டு மாடிகளை கொண்ட கட்டிடத்தில் மேல்மாடியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஹரகம பிரதேசத்தை சேர்ந்த பBண்டையா என்றழக்கப்படும் 5 வயது மதிக்கத்தக்க சிறுவனே இத் தீ விபத்தில் உயிரிலந்துல்லன். உயிரிழந்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நிட்டம்புவா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேட்கொண்டுள்ளனர்.
புகைப்படங்கள்: ஷையாப்



