"எங்கள் தேடலில் பௌசுல் ஹகீம்"



நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை தமிழ் பிரிவில் கம்பஹா மாவட்டத்தில் மூன்றவது இடத்தையும், அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் முதலாவது இடத்தையும் பெற்று ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவன் பௌசுல் ஹகீம் அவர்களைப் பற்றி பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பௌசுல் ஹக்கீமின் தந்தை ஆகியோரிடம் திஹாரிய நியூஸ் நேர்முகம் கண்டபோது அவர்கள் எமக்கு வழங்கிய கருத்துக்களின் வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது. 



ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவன் பௌசுல் ஹகீம் மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. ஹக்கீமின் சகோதரர் பௌசுல் கரீம் தரம் 6 இல் கல்விகற்றுக்கொண்டிருக்கும் திறமைமிக்க மாணவன், ஹக்கீமின் தங்கை ஹிக்மா பிறந்து சில மாதங்களே ஆனா கைக்குழந்தை. இவரது தாய் இல்லத்தரசி, தந்தை பௌசுல் ரஹ்மான் சாதாரண தையற்காரர் (Tailor) வறுமைக்கு மத்தியிலும் தனது குழந்தைகளின் கல்விக்காக தன்னால் முடியுமான பங்களிப்பை வழங்கிகொண்டிருக்கும் பொறுப்புள்ள தந்தை.

பௌசுல் ஹகீம் தனது தந்தையுடன் 

பௌசுல் ஹகீம் போன்ற திறமையான மாணவர்கள் எமது ஊரின் எதிர்காலம். இவரின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி ஊக்கபடுத்துங்கள். ஆதேநேரம் உள்நாட்டு, வெளிநாட்டில் வசிக்கும் எமது நேயர்கள் இவரது இந்த வெற்றிக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள விரும்பினால் நேரடியாக தொடர்புகொள்ளுங்கள்

எம். பி.  பௌசுல் ரஹ்மான் ( பௌசுல் ஹகீம் - தந்தை)
0094 33 2295662

1 Comments

Previous Post Next Post