தேசிய அடையாள அட்டைக்காக 30 திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.


கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியுமென ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. 

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கின்ற மாணவர்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களை அனுபவிக்க வேண்டும் என திணைக்கள ஆணையாளர் ஜகத் விஜேவீர தெரிவித்துள்ளார். 

இதன்படி அடுத்த மாதம் 30ஆம் திகதியன்று 16 வயது பூர்த்தியடைகின்ற அனைத்து மாணவர்களினதும் விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த வருடத்திற்கான கல்வி பொது தாரதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி -அததெரண

Post a Comment

Previous Post Next Post