700வது கோடி குழந்தையை உலகிற்கு வரவேற்க உலகம் முழுவதும் உள்ள குழந்தை மகப்பேற்று வைத்தியசாலைகளில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதோடு அக்குழந்தைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அதே நேரம் இலங்கையிலும் 700வது கோடி குழந்தைகள் இரண்டு பிறந்துள்ளதாக கொழும்பு சிறுவர் ரிட்ஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணி 1 செக்கனில் இரு குழந்தைகள் பிறந்ததாக அவர் குறிப்பிட்டார். குறித்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.
2100ம் ஆண்டில் உலகின் சனத்தொகை 10 பில்லியனை தாண்டும் என ஐநா அறிவித்துள்ளது.