திஹாரிய யூத் கலந்துகொண்ட இரண்டாவது பிரீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டி இன்று திம்பிரிகஸ்யாய எட்வேர்ட் ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் திம்பிரிகஸ்யாய பிரமில் விளையட்டுக்கழகத்தை வெற்றிகொண்டது.இன்றைய போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய இபாம் இம்மூன்று கோல்களையும் பெற்றுக்கொடுத்தார் .
பிரீமியர் லீக் போட்டிகளில் திஹாரிய யூத் கலந்துகொண்ட முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜகிரிய ஒபேசேகரபுற விளையாட்டுமைதானத்தில் சமில் விளையட்டுக்கழகத்திற்கு எதிராக நடைபெற்றது. இப்போட்டியில் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் திஹாரிய யூத் வெற்றிகொண்டது.